தொடர்ந்து சில நாட்களாக ஆஸ்ரேலியாவின் கிழக்குக் கரையோரத்தில் கடும் மழைச்சாட்டையடி.

பல நாட்களாக விடாமல் மழைபெய்து வருவதால் ஆஸ்ரேலியாவின் கிழக்குக் கரையோரத்தில் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டு வருகின்றன. வடமேற்குக் கரையோரத்தின் பெரிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. எனவே பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குப் போகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

சிட்னி நகரின் மேற்கே சுமார் 60 கி மீ தூரத்திலிருக்கும் வரங்காம்பா அணைக்கட்டில் நீர்மட்டம் உயர்ந்து சுற்றுப்பகுதியெங்கும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியிருக்கிறது. தொலைக்காட்சியில் வெள்ளம் பல வீடுகளின் சாளரங்கள் மூலமாக உடைத்துக்கொண்டு உள்ளே வருவதையும், வீடுகள் முழுவதுமாக அள்ளப்பட்டு வெள்ளத்தில் போவதையும் காண முடிகிறது. பல பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டிருக்கிறது.

ஒரு நாளுக்கு முன்னர்தான் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்து மக்கள் அப்பகுதியில் பல வெள்ளப்பெருக்குகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டார்கள். ஆஸ்ரேலியாவின் சுமார் 25 % விகிதமான மக்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்துக் கரையோரங்களில் வாழ்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *