மோடியின் பங்களாதேஷ் விஜயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தியவர்களிடையே நாலு மரணங்கள்.

பங்களாதேஷில் மோடியின் வருகையை எதிர்த்து இஸ்லாமியப் பழமைவாத ஹவாசத் ஏ இஸ்லாம் அமைப்பினர் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை ஒழுங்கு செய்திருந்தனர். அப்படியான ஊர்வலமொன்று சட்டோகிராம் நகரிலும் நடைபெற்றது. அங்கே உண்டாகிய கலவரங்களில் பலர் காயப்பட்டதாகவும், அவர்களில் சிலர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே நால்வர் இறந்ததாக பங்களாதேஷ் பொலீஸ் அறிவித்தது. 

https://vetrinadai.com/news/bangala-modi/

பங்களாதேஷிலிருக்கும் இஸ்லாமிய மடப் பாடசாலைகளான மதராஸாக்களில் படிக்கும் மாணவர்களிடையே ஹவாசத் ஏ இஸ்லாம் ஆதரவு பெற்றிருக்கிறது. அதன் மாணவர்களே சட்டோகிராம் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று அவர்களிடையே ஒழுங்கை நிலைநாட்ட முற்பட்ட பொலீசாருடன் மோதியபோதே பலர் காயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தலைநகரான டாக்கா பள்ளிவாசலைச் சுற்றிவர உள்ள பிராந்தியத்திலும் மக்கள் மோடியின் விஜயத்துக்கெதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் ஈடுபட்டார்கள். மேலும் பிரஹ்மான்பாரியா நகரின் ரயில் நிலையத்தில் தீவைக்கப்பட்டதால் அப்பிராந்தியத்து ரயில் போக்குவரத்தும் ஸ்தம்பித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. 

இந்தியாவில் ஹிந்து தேசியவாதிகளின் ஆதரவுடன் முஸ்லீம்களின் உரிமைகளை மட்டுப்படுத்துவதாக மோடி மீது பங்களாதேஷ் இஸ்லாமியக் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. அவர்கள் சமீப நாட்களில் பங்களாதேஷின் பல பகுதிகளிலும் மோடியை வரவேற்ற ஷேக் ஹசீனாவுக்கு எதிராக ஊர்வலங்கள் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *