உலக நாடுகளிலெல்லாம் நிறுவனங்களுக்கு மேல் விதிக்கப்படும் வரிகளுக்கு ஒரு பொது அடித்தளம் அமைக்க அமெரிக்கா பிரேரிக்கிறது.

சமீபத்தில் அமெரிக்காவில் மிகப்பெரிய கட்டுமான வேலைகள், சுற்றுப்புற சூழலுக்கான நடவடிக்கைகள், சமூக மாற்றங்களுக்காப் பெரும் தொகையொன்றைச் செலவழிக்கப் பிரேரித்திருக்கும் ஜோ பைடன் அரசு அதற்காகத் தனது நாட்டின் நிறுவனங்களுக்கு மீதான வரியை அதிகரிக்கவும் பரிந்துரைத்திருக்கிறது. அதே சமயம் உலகின் மற்றைய நாடுகளும் தமது நிறுவனங்களுக்கு மீது விதிக்கும் வரிகளுக்கும் ஆகக்குறைந்த அடித்தளமொன்று வேண்டுமென்று விரும்புகிறது. 

https://vetrinadai.com/news/tax-usa/

அமெரிக்காவின் பொருளாதார அமைச்சர் ஜனட் யெல்லன் இதை உலகப் பொருளாதாரத்தில் முன்னிலையிலிருக்கும் நாடுகளின் முன்னால் பரிந்துரைக்கிறார். இதேபோன்ற கோரிக்கையை நீண்ட காலமாக எழுப்பிவரும் முக்கிய நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் அதை ஆதரிக்கின்றன. 

நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரிகள் ( corporate tax) அதிகமாகும் பட்சத்தில் அந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட நாடுகளிலிருந்து மாறி வேறு நாடுகளில் தனது தலைமைத்தளத்தை அமைக்கலாம். அதிக நிறுவனங்களைத் தமது நாடுகளுக்கு இழுக்கும் நாடுகள் குறைந்த நிறுவன வரிகளை விதிப்பது சாதாரணமானதே. எனவே தாம் தமது நிறுவன வரிகளை உயர்த்துவதால் தமது நாட்டிலிருக்கும் நிறுவனங்கள் மற்றைய சுபீட்சமான நாடுகளை நோக்கி ஓடிவிடலாகாது என்ற எண்ணத்திலேயே அமெரிக்கா தற்சமயம் இந்தப் பரிந்துரையைச் செய்கிறது என ஊகிக்கலாம். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *