சித்திரை பிறந்தாச்சு
சித்திரையும் பிறந்தாச்சு
திசையெங்கும் ஒளியாச்சு
நித்திரையும் போயாச்சு
நிறைஞ்சஇன்பம் வந்தாச்சு
முத்திரையும் தந்தாச்சு
முகூர்த்ததினம் பார்த்தாச்சு
சித்தமதும் தெளிவாச்சு
தெய்வபலம் உண்டாச்சு!
இரண்டாண்டாய் ஆட்டிவச்ச
இன்னலெல்லாம் போயாச்சு
வருமானம் பெருகிடத்தான்
வழியதுவும் பிறந்தாச்சு
தரமான வாழ்வளிக்கத்
தங்கமகள் வந்தாச்சு
திருவெல்லாம் கிடைத்திடவே
சித்திரையும் மலர்ந்தாச்சு!
காலமகள் கைகொடுத்துக்
கருணையுந்தான் பொழிந்தாச்சு
ஆலமரம் போலேதான்
அருங்குடும்பம் தழைச்சாச்சு
வேலனவன் துணையாலே
வேதனைகள் போயாச்சு
சீலமுடன் துலங்கிடவே
சித்திரையும் வந்தாச்சு!
எழுதுவது :சி.விஜயலட்சுமி கோவிந்
சித்திரை திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் சித்திரை திருநாள் அன்பு வாழ்த்துக்கள்
Vetri Nadai வெற்றி நடை