இந்தோனேசியாவில் உதைபந்தாட்ட மோதல்-விபத்து-மரணங்கள் நடந்த அரங்கு இடித்துப் புதிதாகக் கட்டப்படவிருக்கிறது.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னார் இந்தோனேசிய உதைபந்தாட்ட மோதல் நடந்தபோது ஏற்பட்ட கலவரத்தின்போது நூற்றுக்கும் அதிகமானோர் இறந்தது தெரிந்ததே. கலவரத்தை அடக்குவதாகப் பொலீஸ் கண்ணீர்ப்புகை, தடியடி நடத்தியது.

Read more

இந்தோனேசிய உதைபந்தாட்டக்குழு விசிறிகள்- பொலீஸ் மோதலில் 174 பேர் மரணம்.

இரண்டு தசாப்தங்களில் முதல் தடவையாகத் தாம் ஆதரிக்கும் உதைபந்தாட்டக்குழு Arema FC தோற்றுப் போனதை அறிந்ததும் மைதானத்துக்குள் நுழைந்து கலவரம் செய்தார்கள். 2 -3 என்ற எண்ணிக்கையில்

Read more

இஸ்ராயேலை ஒரு நாடாக அங்கீகரிக்காத பாகிஸ்தான் அங்கே தனது ராஜதந்திரிகளை அனுப்பியிருக்கிறது.

இஸ்ராயேலை ஒரு நாடாக அங்கீகரிக்க மாட்டோம் என்று தீவிரமாகக் குறிப்பிட்டு வரும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. இஸ்ராயேலுடன் ராஜதந்திர உறவுகள் எதையும் கொண்டிருக்காத நாடுகளிலொன்று இந்தோனேசியா. இந்த

Read more

“காடுகளையழிப்பதைக் குறைப்பதற்கேற்றளவு சன்மானம்” இந்தோனேசியாவுடன் நோர்வே ஒப்பந்தம்.

உலகின் மழைக்காடுகளில் மூன்றாவது அதிக அளவைக் கொண்ட இந்தோனேசியாவில் விவசாயத்துக்காகவும், ஏற்றுமதிப் பொருட்களுக்காகவும் காடுகளை அழிப்பது சாதாரணமானது. காடுகளை அழிப்பதைத் தடுத்து நிறுத்துவதானால் அதற்கிணையான நிதியுதவி வேண்டும்

Read more

“நவம்பரில், பாலியில் நடைபெறவிருக்கும் ஜி 20 நாடுகளின் மாநாட்டில் சீன, ரஷ்ய ஜனாதிபதிகள் பங்குபற்றுவார்கள்.”

ரஷ்ய – உக்ரேன் போரினால் சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருக்கும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளை மட்டுப்படுத்தும் நோக்கத்தில் நடுவராக முயலும் உலகத் தலைவர்களில், இந்தோனேசிய ஜனாதிபதி யூகோ வுடூடுவும்

Read more

இந்தோனேசியாவில் வேகமாகப் பரவும் நாய் இறைச்சி உண்ணலில் 7 % மக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

உலகின் மிகப்பெரிய முஸ்லீம்கள் தொகையைக் கொண்ட நாடான இந்தோனேசியாவில் 270 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். 87 % விகிதமானோர் முஸ்லீம்கள். அவர்களிடையே பன்றி இறைச்சி, நாய் இறைச்சி

Read more

சமையலுக்கான எண்ணெய் விலை எகிறும்போது இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதி தடை!

ரஷ்யா – உக்ரேன் போர் காரணமாக உலகில் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, விலையேற்றம் உண்டாகியிருக்கிறது. தமது பணப்பைகளில் அதன் தாக்கத்தை மக்கள் உணர்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் தமது நாட்டில்

Read more

இஸ்லாமியச் சிறுமிகள் பாடசாலை நடத்தி மாணவிகளை வன்புணர்வு செய்துவந்த தலைமை ஆசிரியருக்கு மரண தண்டனை.

36 வயதான ஹெரி விரவன் இந்தோனேசியாவில் சிறுமிகளுக்கான பாடசாலையின் தலைமை ஆசிரியருக்கு நாட்டின் உயர் நீதிமன்றம் மரண தண்டனை கொடுத்துத் தீர்ப்பளித்திருக்கிறது. சுமார் ஐந்து வருடங்களாக 13

Read more

இந்தோனேசியர்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட அதீதமான குற்றங்களுக்காக நெதர்லாந்து மன்னிப்புக் கோரியது.

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் இந்தோனேசியாவைத் தொடர்ந்தும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பி வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது அக்காலத்தில் அவர்களின் காலனிய எஜமானாக இருந்த நெதர்லாந்து. 1945

Read more

இந்தோனேசியாவின் “புவாயா காலுங் பான்” கழுத்திலிருந்த அணிகலன் அகற்றப்பட்டது..

சுலாவேசி தீவிலிருக்கும் பாலு நகரையடுத்த ஆறொன்றுக்குள் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் தனது கழுத்தில் மோட்டார் சைக்கிள் டயரை மாலையாக அணிந்த முதலையொன்றை அப்பகுதி மக்கள் கண்டார்கள்.

Read more