“எங்கள் பிராந்தியத்தில் நடக்கும் போர்க்குற்றங்களை ஆராய எங்கள் நாட்டிடம் ஒழுங்கான நீதியமைப்பு இருக்கிறது,” என்கிறது இஸ்ராயேல்.

மார்ச் மூன்றாம் திகதியன்று சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இஸ்ராயேல் கைப்பற்றித் தன்னிடம் வைத்திருக்கும் பிராந்தியங்களில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றிய முழு விசாரணைகள நடத்தப்போவதாக அறிவித்தது. அதற்கான பதிலாக, அந்தச் சர்வதேச நீதிமன்றத்தில் அங்கத்துவரல்லாத இஸ்ராயேல் அந்த விசாரணைகளில் ஒத்துழைக்க மாட்டோமென்கிறது. 

https://vetrinadai.com/news/israel-icc/

“எங்கள் நாட்டின் நீதித்துறை எங்களுடைய எல்லைக்குட்பட்ட பிராந்தியங்களில் நடக்கும் குற்றங்களை ஆராய்ந்து நீதிபரிபாலிக்கும் வல்லமையுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எங்கள் எல்லைக்குள் நடந்தவை பற்றிய விசாரணை நடாத்தும் அதிகாரமில்லை. எங்கள் போர்வீரர்கள் போர்க்குற்றங்களெதையும் செய்யவில்லை. எனவே, நாம் அந்த நீதிமன்றத்துடன் ஒத்துழைக்கமாட்டோம்,” என்று இஸ்ரயேலின் பிரதமர் நத்தான்யாஹூ தெரிவித்திருக்கிறார்.

இஸ்ராயேல் தன்னிடம் வைத்திருக்கும் சில நிலப்பிரதேசங்களின் அதிகாரமான பாலஸ்தீனம் 2015 லிருந்து சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் அங்கத்தவராக இருக்கிறார்கள். பாலஸ்தீனர்களின் பக்கத்திலிருந்து அந்த நீதிமன்ற விசாரணைக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. 

அமெரிக்கா சில நாட்களுக்கு முன்னர் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற முக்கிய வழக்கறிஞர்கள் மீது போட்டிருந்த தடைகளை நீக்கினாலும் இஸ்ராயேல் மீதான விசாரணைகளைத் தாம் ஆதரிக்கவில்லையென்று தெரிவித்திருந்தது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *