சீனாவை எதிர்கொள்ள இராணுவ – ஒன்றிய ஒப்பந்தத்தில் இணையும் ஜப்பானும், இந்தோனேசியாவும்.

தென்சீனக்கடலில் பெரும்பாலான பாகத்தைத் தன்னுடையதென்று ஆக்கிரமிப்புச் செய்யும் சீனாவை எதிர்கொள்ள அதன் பக்கத்து நாடுகள் வெவ்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகின்றன. சீனா குறிப்பிடும் எல்லைகளைப் பக்கத்து நாடுகள் ஆதரிக்காவிட்டாலும் சீனாவின் அளவும், இராணுவப் பலமும் அவர்களைப் பயப்படவே வைக்கிறது. 

https://vetrinadai.com/news/nine-dash-line/

ஒன்றுசேர்ந்து சீனாவை எதிர்கொள்வது என்பது ஒரு வகையில் பலத்தைக் கொடுக்கும் என்று கணிப்பிட்டு இந்தோனேசியாவும் ஜப்பானும் தம்மிடையே ஏற்கனவே இருக்கும் இராணுவப் பாதுகாப்பு ஒற்றுமை ஒப்பந்தத்தைப் பலப்படுத்துகின்றன. வெளிப்படையாகவே தனித்தனியாகத் தாம் சீனாவுடன் தமது உரிமைகளைக் கோரமுடியாது என்பதை இந்த நாடுகள் ஒப்புக்கொள்கின்றன. 

ஜப்பானைப் பொறுத்தவரை தனது தொழில் நுட்பப்பலத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கும் பாதுகாப்பு உபகரணங்களைப் பக்கத்து நாடுகளுக்கு விற்கத் தயாராகிறது. ஜப்பானின் கண்காணிப்பு உபகரணங்களை வாங்கித் தமது மீன்பிடிக் கப்பல்களில் பொருத்த முடிவு செய்திருக்கிறது இந்தோனேசியா. அதன் மூலம் தனது கடல் எல்லைகளைக் கண்காணிப்பதே இந்தோனேசியாவின் நோக்கம். 

தமது நாட்டின் இரானுவப் பாதுகாப்பை நவீனப்படுத்தவும், பலப்படுத்தவும் ஜப்பானை வரவேற்பதாகக் குறிப்பிடுகிறது இந்தோனேசியா.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *