Friday , February 26 2021
Breaking News

முதன்மைச் செய்திகள்

வைரஸ் தொற்றுப் பரிசோதனை :போலி அறிக்கைகள் புழக்கத்தில்!

வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் போலியான சோதனை ஆவணங்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன என்று ஐரோப்பிய பொலீஸ் சேவையான ‘ஈரோபொல்’ (Europol) எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே எல்லை தாண்டிய பயணங்களின் போது பிசிஆர் என்கின்ற வைரஸ் சோதனை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை பல நாடுகள் கட்டாயமாக்கி உள்ளன. இதனை அடுத்தே போலியான வைரஸ் சோதனை ஆவணங்களை (negative Covid-19 tests) ரகசியமாக விற்பனை செய்கின்ற முயற்சிகள் …

Read More »

ஐந்தே நாட்களில் ஒன்றரை மில்லியன் எவ்ரோக்களைச் சம்பாதித்துக் கொடுத்த பெர்னியின் பிரபல கையுறைகள்.

ஒரு பக்கம் ஜோ பைடனின் பதவியேற்ற வைபவம் நடந்துகொண்டிருக்க, அதைத் தனியாக, சமூக விலகல் கட்டுப்பாட்டுக்கிணங்க ஒதுங்கியிருந்து பார்த்துக்கொண்டிருந்த இரண்டு தடவை ஜனாதிபதி வேட்பாளராக முயன்ற பெர்னி சாண்டர்ஸ், தனது கையுறைகள் உலகப் பிரபலமாகப்போவதை அறியாமல். பெர்னி சாண்டர்ஸ் கையுறைகளுடன் இருக்கும் படம் படு வேகமாகப் பிரபலமானது. சமூக வலைத்தளங்களிலும், மீம்ஸுகளாகவும் உலகெங்கும் அதற்கு உண்டான மவுசைக் கண்ட சாண்டர்ஸ் அப்படத்தை வெவ்வேறு உடைகளில் பதித்து விற்பனை செய்தார். ”Chairman …

Read More »

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமிடல் மாநாடு நடக்கிறது, எதிர்க்கருத்துக்கார்கள் மீது பிடியும் இறுக்கப்படுகிறது.

வரவிருக்கும் ஐந்து வருடங்களுக்கான திட்டமிடல்களை நடாத்த இவ்வாரம் வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைநகரான ஹனோயில் கூடியிருக்கின்றனர். அச்சமயத்தில் எவ்வித அரசியல் எதிர்ப்புக்களும் கிளம்பக்கூடாதென்பதற்காக அரசை விமர்சிப்பவர்களும், எதிர்க்கட்சிக்காரர்களையும் சிறைகளில் போட்டுவிட்டார்கள். நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி அரசை வெவ்வேறு வகையில் விமர்சித்த 170 பேர் சிறையிலிருக்கிறார்கள். மாநாடு ஆரம்பிக்க முதல் வாரம் மூன்று பத்திரிகையாளர்களுக்கு 11 – 15 வருடங்கள் சிறைத்தண்டனை கொடுத்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. சமூகவலைத்தளங்களின் அரசாங்கத்தை விமர்சித்து அதைப் புரட்ட …

Read More »

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் மீது தடுப்பு மருந்துகள் கையாளல் பற்றிய விமர்சனம் வலுக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் கலந்தாலோசிக்காது, ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகிகளோடும் சேர்ந்து திட்டமிடாது ஒன்றியத்தின் தலைவர் உர்ஸுலா வொன் டெர் லெயொன் தனிப்பட்ட முறையில் இயங்கினார் என்ற விமர்சனம் கிளம்பியிருக்கிறது. கொவிட் 19 தடுப்பு மருந்துகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேவைக்காக ஒழுங்கு செய்வதில் அவர் எவருடனும் கலந்தாலோசிக்காமல் முடிவுகள் எடுத்து ஒன்றித்தின் பெயரைக் கெடுத்திருப்பதாகக் கருதப்படுகிறது. முக்கியமாகக் கடந்த வார ஆரம்பத்தில் அஸ்ரா ஸெனகா நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வினியோகிப்பதாகச் சொன்ன …

Read More »

ஒரு பக்கம் நிதி குவிகிறது டிரம்ப்புக்கு, இன்னொரு பக்கம் விலகுகிறார்கள் அனுபவம் மிகுந்த கட்சித்தலைகள்.

ரிபப்ளிகன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் மீண்டும் டிரம்ப்பை நோக்கிச் சாய்ந்து கட்சியையே ஒரு தனிமனித மதமாக்கி வருகிறார்கள், என்று முகம் சுழித்துக்கொண்டு புஷ் காலத்திலிருந்து கட்சியில் முக்கியஸ்தவராக இருந்தவர்கள் கட்சியிலிருந்து விலகிவருகிறார்கள். டிரம்ப்பின் கடைசிப் பதவி நாட்களில் அவரை விமர்சித்தவர்களில் சிலர் கூட டிரம்ப்பை நோக்கி வளையக் காரணம் டிரம்ப்பிடம் குவிந்துவிட்டிருக்கும் நிதி என்று குறிப்பிடப்படுகிறது. நிதியை வைத்து தனக்குப் பிடிக்காத, விமர்சித்த கட்சிக்காரரை முகம் தெரியாமலாக்கிவிடுவாரென்று அவர்கள் …

Read More »

ஒன்பதே வயதான அமெரிக்காவின் கறுப்பினச் சிறுமியொருத்தியை பொலீஸ் கைவிலங்கிட்டு கண்ணெரிச்சலை உண்டாக்கும் வாயுவைப் பாவித்தது.

அமெரிக்காவின் மிகப்பெரும் பிரச்சினைகளிலொன்றான இனவாதம், பொலீஸ் அராஜகம் போன்றவற்றை ஜோ பைடனின் அரசு நேரிடக் காலம் வந்துவிட்டது. ரோச்சஸ்டர் நகரில் ஒன்பது வயதுச் சிறுமியொருத்தியைக் கைவிலங்கிட்டு, கண்களுக்குள் எரிச்சல் புகையால் தாக்கிக் காருக்குள் பொலீஸ் ஏற்றும் படங்கள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பிட்ட சிறுமி கடும் மனோவியாதியால் பாதிக்கப்பட்டுத் தனது உயிருக்கும், தனது தாயின் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் நிலைமையிலேயே அதைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாக பொலீஸ் உயரதிகாரி குறிப்பிடுகிறார். அவள் தனக்குத் தானே …

Read More »

ஜோ பைடன் இதுவரை இஸ்ராயேல் பிரதமரைக் கூப்பிட்டுக் கதைக்கவில்லை.

பதவியேற்றுப் பனிரெண்டு நாட்களாகிய பின்னும் அமெரிக்க ஜனாதிபதி இஸ்ராயேல் பிரதமர் நத்தான்யாஹூவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவில்லை என்பது இஸ்ராயேலிய அரசியல் வட்டாரங்களில் மட்டுமன்றி உலக அரங்கிலும் கிசுகிசுவாகியிருக்கிறது. டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற மூன்றாவது நாளே பிரதமர் நத்தான்யாஹுவைக் கூப்பிட்டிருந்தார். அவர்களிருவருடைய நட்பு மத்திய கிழக்கு அரசியலை முழுவதுமாக மாற்றியமைத்ததும், நத்தான்யாஹு ஒரு இஸ்ராயேலியக் குடியிருப்புக்கு டிரம்ப் பெயர் வைத்ததும் அறிந்த விடயங்களே.  தான் பதவியேற்றதிலிருந்து முறையே, கனடா, மெக்ஸிகோ, …

Read More »

வடகடலிலிருக்கும் தீவொன்றிலிருக்கும் ஒற்றைக் கட்டடத்தில் தனியொருவர் சினிமா பார்க்கப்போகிறார் ஒரு வாரத்துக்கு.

இவ்வருட கொத்தன்பெர்க் சினிமா விழா தனிமைப்படுத்தல் சமூக ரீதியில் எவ்வித விளைவுகளை உண்டாக்குகின்றது என்ற சிந்தனையை உண்டாக்குவதற்காக அறிவித்த போட்டியில் வென்றவர் லிசா என்ரோத், என்ற மருத்துவசாலை அவசரசேவைப் பிரிவுத் தாதி. இவருக்கான பரிசு தனித் தீவில், தனிக்கட்டடடத்தில் ஒற்றையாளாக இருந்து ஒரு வாரத்துக்குச் விழாவின் சினிமாக்களைப் பார்ப்பதாகும்.    ஸ்கண்டினேவியாவின் மிகப்பெரிய சினிமா விழாவான கொத்தன்பெர்க் சினிமா வருடாவருடம் ஜனவரி 29 – பெப்ரவரி 08 வரை நடைபெறுவதுண்டு. இவ்வருடம் …

Read More »

பிரான்ஸில் இருந்து அவசர தேவைகளின் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கான அனுமதிப் படிவம் வெளியீடு

ஞாயிறு நள்ளிரவுக்குப்பின் பிரான்ஸில் இருந்து ஜரோப்பாவுக்கு வெளியே உள்ள நாடுகளுக்குச் செல்வது தடைசெய்யப்படுகிறது. அவசர காரணங்களுக்காக மட்டுமே ஒருவர் வெளிநாடு ஒன்றுக்குப் பயணிக்க முடியும்.பிரான்ஸின் பிரதமர் வெள்ளியன்று அறிவித்த போக்குவரத்துக் கட்டுப்பாடு களின் படி இந்தத் தடை அமுலுக்கு வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள், மற்றும் சுவிற்சர்லாந்து, அந்தோரா, நோர்வே, ஐஸ்லாந்து, மொனகோ, வத்திக்கான் தவிர்ந்த ஏனைய வெளிநாடுகளுக்குச் செல்வதற்கே புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுகாதாரம் அல்லது …

Read More »

பல்கலைக்கழக மாணவருக்குஇன்று தொடக்கம் இலவசமாகஉளநல ஆலோசனை, சிகிச்சை

பிரான்ஸில் மனப்பாதிப்புகளுக்கு உள்ளாகின்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு மனநல மருத்துவ ஆலோசனை வழங்கும் இலவச சேவை (“chèque psy”) இன்று பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படுகிறது. வைரஸ் நெருக்கடியால் தனித்தும் வருமான வாய்ப்புகள் இழந்தும் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக அதிபர் மக்ரோன் அண்மையில் அறிவித்த பல உதவித் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். உள ரீதியாக துன்புறுவதாக உணர்கின்ற மாணவர்கள் எவரும் தங்கள் பல்கலைக் கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் ஊடாக ஓர் …

Read More »

உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப்புக்காக வாதாடவிருந்த இரண்டு வக்கீல்கள் விலகினார்கள்.

ஜனவரி 06 ம் திகதியன்று பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையிலீடுபட்டவர்களைத் தூண்டிவிட்டது டிரம்ப்தான் என்று அவரை நீதியின் முன் நிறுத்த இரண்டே வாரங்களின் முன்னர் அவருக்காக வாதாடவிருந்த இரண்டு வக்கீல்கள் விலகிக்கொண்டார்கள். புர்ச் பவர்ஸ், டெபொரா பார்பியர்ஸ் இருவரும் டிரம்ப்பில் தவறில்லை, அவர் அரசியலமைப்புச் சட்டத்துக்கெதிராக நடக்கவில்லை என்று வாதிடுவதற்காகத் தயார் செய்துகொண்டிருந்தார்கள். எவ்விதமாக வாதாடுவது என்று டிரம்ப்புக்கும் வக்கீல்களுக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் அவர்கள் விலகிக்கொண்டதாக அறிவிக்கப்படுகிறது. சொந்த …

Read More »

மியான்மாரை மீண்டும் இராணுவம் கைப்பற்றியதாக அறிவிக்கப்படுகிறது.

சமீப காலத்தில் பல தடவைகள் எச்சரித்தது போலவே மியான்மாரின் இராணுவம் நாட்டைக் கைப்பற்றிவிட்டது. நாட்டின் தலைவர் அவுன் சன் ஸு ஷி உம் மேலும் சில தலைவர்களும் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. நவம்பரில் நடந்த தேர்தலில் ஆளும் கட்சி NLD80 விகிதமான வாக்குகளைப் பெற்று மிகப்பெரும் வெற்றியடைந்திருந்தது. 2015 இன் பின்னர் ஜனநாயக முறைப்படி நடந்த முதல் தேர்தல் அதுவேயாகும். …

Read More »

மெக்ஸிகோவின் மீண்டுமொரு கொடூரமான கூட்டுக் கொலை.

போதை மருந்துத் தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றுக்குப் பெயர்போன மெக்ஸிகோவில் கொடூரமான முறையில் பலரை ஒரேயடியாகக் கொல்வது பல தடவைகள் நடந்திருக்கின்றது. இம்முறை கொல்லப்பட்டிருப்பவர்கள் குவாத்தமாலாவிலிருந்து அமெரிக்காவை நோக்கிச் சென்ற ஏழை அகதிகளையாகும். அமெரிக்காவில் தஞ்சம் கேட்பதற்காக வருடாவருடம் பல்லாயிரக்கணக்கானவர்கள் தென்னமெரிக்க நாடுகளிலிருந்து போவதுண்டு. குவாத்தமாலா, ஹொண்டுரஸ் ஆகிய நாடுகளிலிருந்து அவர்கள் கூட்டம், கூட்டமாக நடந்தும், வாகனங்களிலும் போவதுண்டு. கொவிட் 19 கட்டுப்பாடுகள், அகதிகளை உள்ளே விட மறுத்த டிரம்ப்பின் நிலைப்பாடு …

Read More »

அமெஸான் நிறுவனத்தை நாட்டுக்குள் நுழைய விட வேண்டாமென்று பிரெஞ்ச் நகரங்களில் பேரணிகள்.

பல பிரெஞ்சு நகரங்களிலும் முதலாளித்துவதை எதிர்க்கும் குழுக்கள், சுற்றுப்புற சூழல் ஆதரவாளர்கள் போன்றவைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் அணிதிரண்டு ஜனவரி 30 அன்று ஊர்வலம் சென்று “அமெஸானைப் பகிஷ்கரியுங்கள்”, “எங்கேயும் அவர்களை நுழையவிடாதீர்கள்” என்று குரலெழுப்பினார்கள்.  பிரான்ஸிலிருக்கும் உலக பாரம்பரிய இடமான Pont du Gard க்கு அருகேயுள்ள Fournes நகரில் அமெஸான் நிறுவனம் ஒரு பெரிய கட்டடத்தைக் கட்டவிருக்கிறது. அதையொட்டி அவ்விடத்தருகே செடிகளை நட்டு அமெஸான் நிறுவனத்துக்கெதிரான கோஷங்களை நட்டார்கள் …

Read More »

ஹொங்கொங் குடிமக்கள் பலருக்கு பிரிட்டிஷ் கடவுச்சீட்டுகள் – சீனா உடனேயே பதிலடி கொடுக்கிறது.

ஹொங்கொங்கில் 2020 கோடையில் சீனா தனது புதிய பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து 1997 வரை ஹொங்கொங்கில் பிறந்தவர்களுக்கு பிரிட்டிஷ் குடியுரிமை கொடுக்கப்போவதாக பிரிட்டன் அறிவித்திருந்தது. அதற்குப் பதிலடியாக அப்படியான கடவுச்சீட்டுக்களை ஹொங்கொங்கில் ஏற்றுக்கொள்ளமாட்டோமென்று அறிவிக்கிறது சீனா. 2020 ம் ஆண்டில் ஆரம்பத்தில் சீனா ஹொங்கொங் தனது நாட்டின் ஒரு பகுதியே என்று நிலை நாட்டும் சட்டங்களை அறிமுகப்படுத்த ஆரம்பித்தது. அதன் மூலம் ஹொங்கொங் மக்கள் அதுவரை அனுபவித்து வந்த …

Read More »

வீசப்படும் மாஸ்க்குகளில் சிக்கி அந்தரிக்கும் பறவைகள்!

பயன்படுத்திய மாஸ்க் வகைகளை அவற்றின் நாடாக்களை(straps) வெட்டி விட்டு அல்லது அகற்றிவிட்டு வீசுமாறு பொதுவான வேண்டுகோள் மீண்டும் விடுக்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் கால்களில் மாஸ்க் சிக்கி அந்தரிக்கும் பறவைகள் பல தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதை அடுத்தே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. உலகின் பல பகுதிகளிலும் பறவைகள், சிறிய விலங்குகள் போன்றன கால்களில் மாஸ்க் சிக்கிக்கொள்வதால் நடப்பதற் கும் பறப்பதற்கும் நீந்துவதற்கும் சிரமப்படுகின்ற காட்சிகள் பல சமூக ஊடகங்களிலும் பரவி வருகின்றன. …

Read More »

இளவயதினரிடையே தற்கொலை முயற்சிகள் அதிகரிப்பு!

சிறுவர்கள், இளவயதினர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் எச்சரிக்கும் அளவில் அதிகரித்துள்ளன என்று பாரிஸின் பிரபல ‘நெக்கர்’ (Necker) சிறுவர் மருத்துவமனையின் நிபுணர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். பாரிஸ் மருத்துவமனைகள் சிலவற்றில் கடந்த சில நாட்களாக தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்ட இளவயதினர் நாளாந்தம் ஒருவர் என்ற கணக்கில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொற்று நோய் தொடங்கியதில் இருந்து நாளாந்த வாழ்வு முடக்கங்களால் பெரிதும் மனப் பாதிப்புகளுக்கு உட்பட்டுத் தனித்துப் போயிருக்கின்ற …

Read More »

ஈரானுக்கு ஆதரவாகவா டெல்லியிலிருக்கும் இஸ்ராயேல் தூதுவராலயத்தினருகில் குண்டு வெடிக்கப்பட்டது?

சுமார் ஒரு கி.மீ தூரத்தில் பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றிக்கொண்டிருக்கும் அதே நேரம் இஸ்ராயேலியத் தூதுவராலயத்துக்கு அருகே குண்டு வெடிப்பு நடாத்தியதை “வரவிருக்கும் ஒரு பெரிய அழிவுக்கு முன்னுரை” என்று எழுதிய கடிதம் தூதுவராலயத்துக்குக் கிடைத்திருக்கிறது. குண்டு வெடிப்பு நடக்கச் சில நிமிடங்களின் முன்னர் அப்பகுதியில் இருவர் வாகனத்தில் வந்திறங்கும் படங்கள் இந்தியப் பொலீஸாருக்குக் கிடைத்திருக்கிறது. அக்குண்டு வெடிப்புப் பெரும் சேதமெதையும் ஏற்படுத்தவில்லை எனினும் தமது அமைச்சு அந்தத் …

Read More »

தாம் இறக்கவிரும்பினால் அதற்கு உதவிபெறும் சட்டத்தை போர்த்துக்கல் பாராளுமன்றம் நிறைவேற்றியது.

ஐரோப்பாவின் நாலாவது நாடாக போர்த்துக்கலும் யூதனேசியா என்றழைக்கப்படும் சுய விருப்பத்துடனான இறப்பை அனுமதிக்கும் சட்டம் போர்த்துக்கலின் பாராளுமன்றத்தில் 136 – 78 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொதுவாகச் சம்பிரதாயக் கடமைகளுக்காக இருக்கும் ஜனாதிபதிக்கு இவ்விடயத்தில் அறுதிப் பெரும்பான்மை வாக்கைப் பிரயோகிக்கும் உரிமை இருக்கிறது. எனவே, அவர் அதை அங்கீகரிக்கும் பட்சத்தில் அது சட்டமாகும். வயதுக்கு வந்தவர்கள் தீராத வியாதியால் பாதிக்கப்பட்டுக் கடும் வேதனையில் வாழும்போது தனது வாழ்வை முடித்துக்கொள்ள …

Read More »

சவூதி அரேபியா, எமிரேட்சுக்கான ஏவுகணைகள் விற்பனையை நிறுத்துகிறது இத்தாலி.

சவூதி அரேபியாவுக்கு உறுதி கூறப்பட்டவைகளில் 12,700 ஏவுகணைகளை அனுப்புவதை இத்தாலி நிறுத்தியிருக்கிறது என்று அறிவிக்கப்படுகிறது. காரணம், சவூதி அரேபியாவும், எமிரேட்ஸும் சேர்ந்து யேமனில் நடாத்திவரும் போரில் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மனித குல அழிவும், பொருளாதாரச் சீர்குலைவுமாகும். 2016 ம் ஆண்டு சுமார் 485 மில்லியன் டொலர்களுக்கு 20,000 ஏவுகணைகளைச் சவூதி அரேபியாவுக்கு விற்பதாக அன்றைய இத்தாலிய அரசு உறுதி கூறியிருந்தது. அவைகளில் ஒரு பகுதி ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டது. அவ்வரசின் பிரதமரான …

Read More »